Select Location
All Locations
State
Region
City / District
CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது..

CBSE 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது..

(CBSE) 2026-ஆம் ஆண்டிற்கான 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இந்த ஆண்டு பிப்ரவரி 17 முதல் ஏப்ரல் 10 வரை தேர்வுகள் நடைபெற்றன. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் ஓ.எஸ்.எம் முறை அதாவது திரையில் மதிப்பிடும் முறையானது மதிப்பீட்டுச் செயல்முறையை விரைவுபடுத்த உதவியுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின் மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?

சி.பி.எஸ்.இ 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்ட உடன் மாணவர்களுக்கு அந்தந்தப் பள்ளிகள் மூலமாக அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் தேர்ச்சிச் சான்றிதழ்கள் விநியோகம் செய்யப்படும். மாணவர்கள், பள்ளிகள் வழங்கும் அசல் சான்றிதழ்களைப் பாதுகாப்பாகப் பெற்றுக்கொள்ள வேண்டும். டிஜிலாக்கர் போன்ற தளங்களில் உள்ள டிஜிட்டல் நகல்களையும் தரவிறக்கம் செய்து வைத்துக்கொள்வது அவசியம். உயர்கல்விச் சேர்க்கை, கல்வி உதவித்தொகை மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான தேவைகளுக்கு இந்த இரண்டு பிரதிகளுமே மிகவும் முக்கியம்.

CBSE 12-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை எப்படி செக் செய்வது?

CBSE 12-ஆம் வகுப்புத் தேர்வு முடிவுகளை, CBSE இணையதளம், டிஜிலாக்கர், உமங் செயலி ஆகிய வழிகளில் செக் செய்யலாம்.தேர்வு முடிவுகள் வெளியானவுடன், மாணவர்கள் cbse.gov.in, results.cbse.nic.in, cbseresults.nic.in ஆகிய அதிகாரப்பூர்வ இணையதளங்களில் தங்களின் மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

தேர்வு முடிவுகளைச் சரிபார்க்கத் தேவையான விவரங்கள் எவை?

தேர்வு முடிவுகளைச் சரிபார்க்க பதிவு எண் (Roll number), பள்ளி எண், நுழைவுச்சீட்டு அடையாள எண் (Admit card ID), பிறந்த தேதி ஆகிய விவரங்கள் தேவைப்படும்.


Smacy News 38 minutes ago
Home Flash News