Select Location
All Locations
State
Region
City / District
ராமேஸ்வரம் கோயில் லட்டு விற்பனையில் கோடிக்கணக்கில் மோசடி

ராமேஸ்வரம் கோயில் லட்டு விற்பனையில் கோடிக்கணக்கில் மோசடி

கடந்த 2023-24ஆம் நிதியாண்டிலிருந்து ராமநாத சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் இலவச லட்டு பிரசாதம் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இதுதொடர்பாக இணை ஆணையர் செல்லத்துரை, கடந்த மார்ச் மாதம் ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வில் பல்வேறு மோசடிகள் நடைபெற்றதை கண்டறிந்தார்.

இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட பணியாளர்கள் மற்றும் ஊழியர்களிடம் இணை ஆணையர் செல்லத்துரை விசாரணை மேற்கொண்டார். இதில், கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் நடப்பாண்டு பிப்ரவரி மாதம் வரை 20 லட்சத்து 71 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு, கவுன்டரில் பக்தர்களிடம் 3 கோடியே 40 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, இளநிலை உதவியாளர்கள் கே.பஞ்சமூர்த்தி, லாவண்யா, அம்பிகா, டிக்கெட் விற்பனையாளர் செல்வி, பணிப்பெண் சிவனேஸ்வரி, தூய்மை பணியாளர் விக்ரம் ஆகிய ஆறு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது


Kumudham News 56 minutes ago
Home Flash News