சார் பதிவாளர் அலுவலகங்களில் பொதுமக்களை அமர வைத்து அதிகாரிகள் பேச வேண்டும்..!
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் பொதுமக்களை அமரவைத்து மட்டுமே அதிகாரிகள் பேச வேண்டும் என பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களிலும் பொதுமக்களை அமரவைத்து மட்டுமே அதிகாரிகள் பேச வேண்டும் என பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக ஏற்கனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும், பல அலுவலகங்களில் அது முறையாக பின்பற்றப்படவில்லை எனவும் பொதுமக்கள் அமர்வதற்கு போதுமான நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை மாவட்ட பதிவாளர்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளார்.