Select Location
All Locations
State
Region
City / District
முதல்வர் விஜய் வாகன அணிக்கு தனி வழி! போக்குவரத்துத் துறை ஏற்பாடு

முதல்வர் விஜய் வாகன அணிக்கு தனி வழி! போக்குவரத்துத் துறை ஏற்பாடு

தமிழக முதல்வராகப் பதவியேற்றிருக்கும் தவெக தலைவர் சி. ஜோசப் விஜய்யின் வீடு அமைந்திருக்கும் நீலாங்கரையிலிருந்து தலைமைச் செயலகம் வரும் வழி நெடுக போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், முதல்வரின் வாகன அணி வருவதற்கு தனி வழி ஏற்படுத்தி போக்குவரத்துத் துறை ஏற்பாடு செய்திருக்கிறது. நீலாங்கரையிலிருந்து, தலைமைச் செயலகம் வரும் வழி முழுக்க விஜய்யின் வாகனம் மற்றும் வாகன அணி வரும்போது, சாலையில் ஒரு பகுதியை மட்டும் முக்கோண தடுப்புகள் அமைக்கப்பட்டு, பிரித்துவிடுகிறார்கள்.

இதனால், ஒரு பகுதியில் முதல்வர் மற்றும் அவருடன் வரும் வாகன அணி எந்த தங்கு தடையும் இன்றி பயணிக்கும். அதே சாலையின் மற்றொரு பக்கத்தில் பொதுமக்கள் பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. முதல்வரின் வருகையின்போது போக்குவரத்து பாதிக்கப்படுவது குறித்து தொடர்ந்து ஊடகங்கள் கவனத்துக் கொண்டு வந்த நிலையில், போக்குவரத்துத் துறையினர், இந்த மாற்று ஏற்பாட்டினை செய்துள்ளனர். இதனால், முதல்வர் விஜய் வருகையின்போது, பொதுப் போக்குவரத்து நிறுத்தப்படுவது தவிர்க்கப்படுகிறது.

நீலாங்கரையிலிருந்து தலைமைச் செயலகத்துக்கு 17 கிலோ மீட்டர் பயணம். வழி நெடுக காவல்துறை பாதுகாப்பு, போக்குவரத்து நெரிசல் போன்றவற்றைத் தவிர்க்க, தலைமைச் செயலகம் அருகே முதல்வருக்கு அரசு இல்லம் ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Dinamani 52 minutes ago
Home Flash News