Select Location
All Locations
State
Region
City / District
மே 10 முதல் 200 யூனிட் இலவச மின்சாரம்! அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை

மே 10 முதல் 200 யூனிட் இலவச மின்சாரம்! அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை

தவெக அரசு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதாக அறிவித்த நிலையில், அதனை செயல்படுத்துவது குறித்து அனைத்து மாவட்ட மின் பொறியாளர்களுக்கும் மின்வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. தமிழ்நாட்டில் முந்தைய திட்டத்தின்படி, அனைத்து வீட்டு மின் இணைப்புகளுக்கும் 100 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

தவெக அரசு பொறுப்பேற்றதும் தனது தோ்தல் அறிக்கையில் கூறியிருந்தபடி, 200 யூனிட் இலவச மின்சாரத்திற்கான திட்டத்தில் முதல்வர் விஜய் கையெழுத்திட்டார். இந்தப் புதிய அரசாணையின்படி, இரு மாதங்களுக்கான மின் பயன்பாடு 500 யூனிட்டுக்குள் இருந்தால் 200 யூனிட் வரை இலவசமாக வழங்கப்படும். இதன் மூலமாக 500 யூனிட்டுக்கு குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் 2.23 கோடி குடும்பத்துக்கு ரூ. 235 மிச்சமாகும். 500 யூனிட்டுகளுக்கு அதிகமாகப் பயன்படுத்தும் மின்நுகா்வோருக்கு தற்போது நடைமுறையில் உள்ள 100 யூனிட் மின்சாரம் இலவச சலுகை தொடா்ந்து வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தவெக அரசு அறிவித்துள்ள 200 யூனிட் இலவச மின்சாரத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அனைத்து மாவட்ட மின் பொறியாளர்களுக்கும் மின்வாரியம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. மென்பொருளில் தேவையான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், கட்டண மென்பொருளில் தகுதி சரிபார்ப்பு, மானிய கணக்கீட்டு பட்டியல் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் மின் வாரியத்தில் பணியாற்றும் பணியாளர்களுக்கும் இதுபற்றி எடுத்துரைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் மே 10ல் இருந்து 200 யூனிட் இலவச மின்சாரம் கணக்கிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Dinamani 1 hour ago
Home Flash News