மேற்கு ஆசியா போரால் பாதிப்பு; இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.4% ஆக குறையும்: ஐநா கணிப்பு
ஐக்கிய நாடுகள் சபை: ஐநாவின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத்துறை வெளியிட்ட அறிக்கை குறித்து அத்துறையின் பொருளாதார கண்காணிப்பு துறையின் பொறுப்பாளரும், மூத்த பொருளாதார நிபுணருமான இங்கோ பிட்டர்லே கூறியதாவது: மேற்கு ஆசியா நெருக்கடியானது உலக பொருளாதாரத்திற்கு மற்றொரு அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த உலகளாவிய சவாலில் இருந்து இந்தியா பாதிக்கப்படாமல் இருக்க முடியாது. இந்தியா எரிசக்தியை பெருமளவில் இறக்குமதி செய்யும் நாடாக உள்ளது. இதனால், 2026ம் ஆண்டிலும் இந்தியாவின் பொருளாதார உற்பத்தி 6.4 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2025ம் ஆண்டில் இருந்த 7.5 சதவீத வளர்ச்சியில் இருந்து தற்போது 6.4 சதவீதமாக குறைந்திருப்பது, அதிகரித்து வரும் எரிசக்தி இறக்குமதி செலவுகள் மற்றும் இறுக்கமான நிதிச் சூழல் ஆகியவை பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்படும் தடையை குறிப்பிட்டு காட்டுகின்றன. அதே சமயம் இந்தியாவில் நுகர்வோர் தேவை, அரசு முதலீடுகள், சேவைத்துறை ஏற்றுமதிகளின் சிறப்பான செயல்பாடு ஆகிய முக்கிய உந்துசக்திகளால் மிகவும் வலுவான பொருளாதார வளர்ச்சியை நாங்கள் காண்கிறோம் என்றார்.