Select Location
All Locations
State
Region
City / District
ராஜீங் காந்தி நினைவு தினம்: ஸ்ரீபெரும்புதூரில் காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி..

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

முன்னாள் பிரதமர், பாரத ரத்னா ராஜிவ்காந்தி அவர்களின் 35-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி ஸ்ரீபெரும்புதூர் ராஜிவ்காந்தி நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வபெருந்தகை தலைமையில் மலர் வளையம் வைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து பயங்கரவாத எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ் குமார், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் நிவேதித் ஆல்வா மற்றும் சூரஜ் எம்.என். ஹெக்டே, அகில இந்திய காங்கிரஸ் தொழில் வல்லுநர்கள் பிரிவு தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் விஸ்வநாதன், ஜமால் முகமது யூனூஸ்.

தமிழ்நாடு காங்கிரஸ் துணைத் தலைவர்கள் டி.என். முருகானந்தம், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் எஸ்.ஏ. அருள் ராஜ் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள், முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் பங்கேற்றனர்..


Dhina Thanthi 1 hour ago
Home Flash News