தமிழக அமைச்சரவையில் புதிதாக 23 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கவர்னர் அர்லேகர் இன்று பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இருவர் அமைச்சர்களாக பதவியேற்றனர். முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் பட்டியலினத்தை சேர்ந்த 7 பேர் பதவியேற்றுள்ளனர்..
இந்த நிலையில், புதிதாக பதவி ஏற்றுள்ள அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்து கவர்னர் அர்லேகர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 23 அமைச்சர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள இலாகா விபரம் பின்வருமாறு;
அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாக்காக்கள் பட்டியல்;
1.கே.ஏ.செங்கோட்டையன் - வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை
2.ஸ்ரீநாத் - மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை
3.எஸ்.கமலி - கால்நடைத்துறை
4.சி.விஜயலட்சுமி -பால்வளத்துறை
5.ஆர்.வி.ரஞ்சித்குமார் - வனத்துறை
6.வினோத் - வேளாண் மற்றும் உழவர் நலத்துறை
7.ராஜீவ் - சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை
8.பி.ராஜ்குமார் - வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை
9.வி.காந்திராஜ் - கூட்டுறவுத் துறை
10.பி.மதன் ராஜா - சிறு, குறு, நடுத்தர தொழில்துறை
11.கே.ஜெகதீஸ்வரி - சமூக நலத்துறை
12.எஸ்.ராஜேஷ்குமார் - சுற்றுலாத்துறை
13.எம்.விஜய் பாலாஜி - கைத்தறி, ஜவுளி மற்றும் கதர் துறை
14.டி.லோகேஷ் தமிழ்செல்வன் - வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை
15.ஏ.விஜய் தமிழன் பார்த்திபன் - போக்குவரத்து துறை
16.ரமேஷ் - இந்து சமய அறநிலையத்துறை
17.பி.விஸ்வநாதன் - உயர் கல்வித்துறை
18.ஆர்.குமார் - செயற்கை நுண்ணறவு, தகவல் தொழில்நுட்பம்
19.கே.தென்னரசு - வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை
20. வி.சம்பத்குமார் - பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
21.ஜெ.முகமது பர்வாஸ் - தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
22.டி.சரத்குமார் - மனிதவள மேலாண்மை துறை
23.என்.மரிய வில்சன் - நிதி, திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை
24.கே.விக்னேஷ் - மதுவிலக்கு மற்றும் கலால் துறை..
LIVE