Select Location
All Locations
State
Region
City / District
10ம் வகுப்பு தேர்வில் குறைந்த மார்க் 2 மாணவிகள் தூக்கிட்டு தற்கொலை

மரக்காணம்: 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்ததால் மனமுடைந்த 2 மாணவிகள் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர். விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே அனுமந்தை கிராமம் தெற்கு தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகள் நந்தினி(15). ஏழுமலை சில ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். இதனால் இவரது தாய் அருள்மொழி மிகவும் சிரமப்பட்டு மகளை படிக்க வைத்துள்ளார். அதிக மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக வடஅகரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் சேர்த்துள்ளார்.

நேற்று காலை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இதில் நந்தினி 500 க்கு 295 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.ஆனால் குறைந்த மதிப்பெண் பெற்றுவிட்டதாக மன உளைச்சல் இருந்த அவர், திடீரென தனது வீட்டில் இருந்த பூச்சிமருந்தை எடுத்து குடித்துவிட்டு மயங்கி விழுந்துள்ளார். இதனைப்பார்த்த அவரது உறவினர்கள் நந்தினியை மீட்டு புதுவை கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவந்த நிலையில், மாணவி நந்தினி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து புகாரின்படி, மரக்காணம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே புதுக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மந்தை அம்மாள். இவரது மகள் ஷாலினி (15). இவர் விருதுநகர் மாவட்டம் கட்டனூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று தேர்வு முடிவு வெளியான நிலையில், மாணவி ஷாலினி கணித பாடத்தில் தோல்வி அடைந்துள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி நேற்று மாலை தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


Dinakaran 1 hour ago
Home Flash News