Select Location
All Locations
State
Region
City / District
அரசு ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு.. பணிக்கு லேட்டா வந்தால் நடவடிக்கை .. பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

அரசு ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு.. பணிக்கு லேட்டா வந்தால் நடவடிக்கை .. பள்ளிக்கல்வித்துறை அதிரடி!

TN Government Announcement: ஆசிரியர்கள், பணியாளர்கள் என அனைவருக்கும் பள்ளிக்கல்வித்துறை முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, ஆசிரியர்கள் காலை 10 மணிக்குள் அலுவலகம் வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

TN Government Announcement: தமிழகத்தில் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி நடந்து வருகிறது. விஜய் ஆட்சி அமைந்ததில் இருந்து பல்வேறு மாற்றங்கள் நடந்து வருகிறது. அதே நேரத்தில், முதல்வர் விஜய் தினமும் தலைமைச் செயலகத்திற்கு வருகை தருகிறார். முதல்வர் விஜய் தினமும் காலை 10 மணிக்கு அலுவலகம் வந்து செல்வதாக கூறப்படுகிறது.

அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு

இப்படியாக விஜய் இருக்கும் நிலையில், அரசு ஊழியர்களுக்கு முக்கியமான அறிவிப்புகளை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, ஆசிரியர்கள், பணியாளர்கள் என அனைவரும் காலை 10 மணிக்குள் அலுவலகம், பள்ளிகளுக்கு செல்ல வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அரசு பணியாளர்கள் தாமதமாக அலுவலகத்திற்கு வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்து அலுவலக உதவியாளர்கள், பதிவேடு எழுத்தர்கள் காலை 9.30 மணிக்கு வர வேண்டும். அதிகாரிகள், பணியாளர்கள் என அனைவரும் காலை 10 மணிக்கு முன்பே அலுவலகம் வர வேண்டும். அலுவலகத்தை விட்டு புறப்படுவதற்கு முன்பு, இரண்டாம் நிலை அலுவலர்களிடம் அனுமதி பெற வேண்டும். எந்தவொரு விடுப்பு, மற்றும் அனுமதியை பெறுவதற்கும், விடுப்பு பதிவேடுகளை பராமரிப்பதற்கும் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் இருந்து முன் அனுமதி பெற வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ஆசிரியர்களின் பணி நேரம் தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 4.10 மணி வரை பணி நேரமாக இருக்கிறது. தொடக்கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் காலை 8.45 மணிக்கு பணிக்கு வர வேண்டும். ஆசிரியர்கள் காலை 9 மணிக்கு வருகை தர வேண்டும். உயர் நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் வேலை செய்யும் ஆசிரியர்கள் காலை 9.15 மணிக்கு வர வேண்டும். உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் காலை 9 மணிக்கும், உடற்கல்வி ஆசிரியர்கள் காலை 8.45 மணிக்கு வர வேண்டும் என கூறப்படுகிறது.

கடந்த திமுக ஆட்சியில் அரசு பணியாளர்களின் பணி நேரம் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை இருந்தது. இந்த நிலையில் தான், காலை 10 மணிக்குள் அலுவலகம் வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றும் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

1. பள்ளிக்கல்வித்துறையின் தற்போது அறிவிப்பு என்ன? அதிகாரிகள், பணியாளர்கள் அனைவரும் காலை 10 மணிக்கு அலுவலகத்திற்கு வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
 2. தமிழகத்தில் ஆசிரியர்களின் நேரம் என்ன? தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள் காலை 9 மணி முதல் மாலை 4.10 மணிக்கு பணியில் இருக்க வேண்டும். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் காலை 9.15 மணிக்கு பணிக்கு வர வேண்டும்.
 3. இந்த விதிமுறைகளை மீறினால் என்ன நடக்கும்? பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவுறுத்தல்களை பின்பற்றாமல் தாமதமாக வருவது அல்லது விதிகளை மீறுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


Zee News Tamil 49 minutes ago
Home Flash News