Select Location
All Locations
State
Region
City / District
அமெரிக்க படைத்தளம் மீது ஈரான் தாக்குதல்

பந்தர் அப்பாஸ் தாக்குதலுக்கு பதிலடி.. அமெரிக்க படைத்தளம் மீது ஈரான் தாக்குதல் - மீண்டும் தீவிரமான போர்..

ஹார்முஸ் சர்வதேசக் கடல்வழிப் பாதையை எந்தவொரு தனி நாடும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அமெரிக்கா அனுமதிக்காது
ஈரான், அமெரிக்கா இடையே இன்று அதிகாலை மீண்டும் மோதல்கள் வெடித்துள்ளன.
ஹார்முஸ் ஜலசந்தி அருகே உள்ள பந்தர் அபபாஸ் நகரில் விமான நிலையம் அருகே அமெரிக்கா இன்று அதிகாலை வான்வழித் தாக்குதல் நடத்தியது.
இதில் ஈரானின் 4 தாக்குதல் டிரோன்கள் அழிக்கப்பட்டதாக அமெரிக்கா தரப்பு தெரிவித்தது. தாக்குதல் நடந்த உடன் ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்பட்டது.
இந்த சூழலில் இந்த தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாக தாக்குதல் நடந்த சில மணி நேரங்களில் அமெரிக்க ராணுவ விமான தளம் ஒன்றை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.
தாக்குதலுக்குள்ளான அமெரிக்க தளத்தின் இருப்பிடத்தை ஈரான் ஊடகங்கள் வெளியிடவில்லை.
எனினும், அமெரிக்கா மீண்டும் ஏதேனும் ராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டால், அதைவிட மிகக் கடுமையான மற்றும் தீர்க்கமான பதிலடி பதிலடி கொடுக்கப்படும் என்று ஈரான் எச்சரித்துள்ளது.
அமெரிக்கா தொடர்ந்து போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி வருவதாகக் குற்றம் சாட்டியுள்ள ஈரான் கடற்படை, ஹார்முஸ் ஜலசந்தி வழியாகக் கடக்க முயன்ற அமெரிக்கா தொடர்புடைய எண்ணெய் விநியோகக் கப்பல் மற்றும் பிற 4 சர்வதேசக் கப்பல்களை எச்சரித்துத் திருப்பி அனுப்பியுள்ளதாகக் கூறியுள்ளது.
இதற்கிடையே ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மற்றும் ஓமான் நாடுகள் இணைந்து கூட்டாகக் கட்டுப்படுத்துவது போன்ற ஒரு புதிய அமைதி ஒப்பந்தம் தயாராகி வருவதாக வெளியான தகவல்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் முற்றிலுமாக நிராகரித்துள்ளார்.
அமெரிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய அதிபர் டிரம்ப், "ஹார்முஸ் சர்வதேசக் கடல்வழிப் பாதையை எந்தவொரு தனி நாடும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர அமெரிக்கா அனுமதிக்காது" என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.


Malaimalar 1 hour ago
Home Flash News