Select Location
All Locations
State
Region
City / District
பரந்தூரில் புதிய விமான நிலைய திட்டப் பணிகள் நிறுத்தம்:

பரந்தூரில் புதிய விமான நிலைய திட்டப் பணிகள் நிறுத்தம்: தொழில் பூங்கா அமைக்க தமிழ்நாடு அரசு ஆலோசனை

காஞ்சிபுரம்: பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் பணிகளை தமிழ்நாடு அரசு நிறுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் சுற்றுவட்டார 20 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5746 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகள் அறிவிப்புகள் வெளியிட்டுள்ளது. விமான நிலையம் அமைக்கும் திட்டத்தின் முதல் கட்டமாக கிராமப்புறங்களில் நிலம் எடுப்பு பணிகளை மேற்கொண்டு, நில உரிமையாளர்களிடம் பத்திரப்பதிவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை, 1,700 ஏக்கருக்கு மேலாக, நில எடுப்பு பணிகளை முடித்துள்ளனர்.
இதற்கிடையே, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்துள்ளது; முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ளார். இந்நிலையில் பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் பணிகளை தமிழ்நாடு அரசு நிறுத்தியுள்ளது. விமான நிலையத்துக்கு கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் உணவு பதப்படுத்துதல் தொழில் பூங்கா அமைக்க ஆலோசனை நடைபெற்று வருகிறது. நிலத்தை உரிமையாளர்களிடமே திருப்பி தந்தால், இழப்பீட்டுத் தொகையை அவர்களால் திருப்பி தர முடியுமா? எனவும் கேள்வி எழுந்துள்ளது.


Dinakaran 1 hour ago
Home Flash News