Select Location
All Locations
State
Region
City / District
மகளிர் டி20 கிரிக்கெட் :

மகளிர் டி20 கிரிக்கெட் : இந்தியா – இங்கிலாந்து அணிகள் இன்று மோதல்!

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று செம்ஸ்போர்டுவில் நடக்கிறது.
10வது பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (ஜூன்) 12-ம் தேதி முதல் ஜூலை 5ம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்சில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு தயாராவதற்காக ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.
இதன்படி இன்று இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி செம்ஸ்போர்டுவில் நடக்கிறது. சமீபத்தில் இலங்கை, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடர்களை வென்ற இந்திய அணி கடந்த மாதம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை 1-4 என்ற கணக்கில் இழந்து ஏமாற்றம் அளித்தது. கடந்த ஆண்டு நடந்த இங்கிலாந்து தொடரை (3-2) முதல்முறையாக கைப்பற்றிய இந்திய அணி நம்பிக்கையுடன் களம் இறங்கும் என்பதில் சந்தேகமில்லை.


News 7 Tamil 1 hour ago
Home Flash News