தொகுதி மக்கள் நலனே முக்கியம்; தொகுதி மக்களின் முடிவுதான் என் முடிவு; சி.விஜயபாஸ்கர் பேட்டி
புதுக்கோட்டை: தொகுதி மக்கள் நலனே முக்கியம்; தொகுதி மக்களின் முடிவுதான் என் முடிவு; அவர்களின் கருத்தை உள்வாங்கி இருக்கிறேன் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் பேட்டி அளித்துள்ளார். வெற்றி பெற வைத்தவர்களின் நிலைப்பாட்டை கேட்பதும் அவசியம். எனது ஆதரவாளர்கள் நிறைய கருத்துகளை கூறினார்கள்; அனைத்தையும் கேட்டிருக்கிறேன். நிர்வாகிகள் வேகமாக இருக்கிறார்கள்; நான் பொறுமையாக இருக்கச் சொல்லியிருக்கிறேன்