Select Location
All Locations
State
Region
City / District
“நாட்டுப் பற்று இல்லாத செயல்” - ஈரான் போரை நிறுத்தக் கோரும் அமெரிக்க நாடாளுமன்ற தீர்மானம் மீது ட்ரம்ப் காட்டம்

“நாட்டுப் பற்று இல்லாத செயல்” - ஈரான் போரை நிறுத்தக் கோரும் அமெரிக்க நாடாளுமன்ற தீர்மானம் மீது ட்ரம்ப் காட்டம்

வாஷிங்டன்: ஈரான் போரை நிறுத்​தக் கோரி அமெரிக்க நாடாளுமன்​றத்​தில் தீர்​மானம் நிறைவேற்​றப்​பட்டிருப்பது நாட்டுப் பற்று இல்லாத செயல் என்று அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப் காட்டமாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கும்போதே இந்த அர்த்தமற்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. எனது அதிகாரங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே இதற்கான நோக்கம். இதில், ஜனநாயக கட்சியைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மோசமான 4 உறுப்பினர்களும் வாக்களித்துள்ளார்கள். இத்தகைய நாட்டுப் பற்று இல்லாத செயலை யார் செய்வார்கள்? பேச்சுவார்த்தைகள் எந்த நிலையில் உள்ளன என்பது அவர்களுக்குத் தெரியும்.

ஜனநாயக கட்சியினர் என் மீதான வெறித்தனமான வெறுப்புணர்வால் உந்தப்பட்டுள்ளார்கள். இதில் எனக்கு வெற்றி கிடைப்பதைவிட நாடு தோல்வி அடைவதையே அவர்கள் விரும்புகிறார்கள். குடியரசு கட்சியைச் சேர்ந்த அந்த 4 உறுப்பினர்களைப் பொறுத்தவரை, அவர்கள் கவனத்தை ஈர்க்கும் நாடகக்காரர்கள். தங்கள் செயலுக்காக அவர்கள் வெட்கப்பட வேண்டும்” என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்​கா, இஸ்​ரேல் கூட்​டுப் படைகள் மற்​றும் ஈரான் ராணுவத்துக்கு இடையே கடந்த பிப்​ர​வரி 28-ம் தேதி போர் தொடங்​கியது. பல்​வேறு கட்ட பேச்​சு​வார்த்​தைகளுக்​குப் பிறகு கடந்த ஏப்​ரல் 8-ம் தேதி இருதரப்பு இடையே போர் நிறுத்​தம் அமலுக்கு வந்​தது. எனினும் தற்​காப்பு தாக்​குதல் என்ற பெயரில் அமெரிக்கா​வும் ஈரானும் அவ்​வப்​போது போர் நிறுத்​தத்தை மீறி வரு​கின்​றன. இந்தச் சூழலில் ஈரான் போரை நிறுத்​தக் கோரி அமெரிக்க நாடாளு​மன்​றத்​தின் பிர​தி​நி​தி​கள் அவை​யில் ஐனநாயக கட்சி சார்​பில் தீர்​மானம் கொண்டு வரப்​பட்​டது. இந்த தீர்மானத்​தின் மீது நேற்று முன்​தினம் வாக்​கெடுப்பு நடத்​தப்​பட்​டது. ஆதர​வாக 215 எம்​பிக்​களும், எதி​ராக 208 எம்​பிக்​களும் வாக்​களித்​தனர். பெரும்​பான்மை எம்​.பி.க்​களின் ஆதர​வால் தீர்​மானம் நிறைவேற்றப்​பட்​டது.

குறிப்​பாக ஆளும் குடியரசு கட்​சியை சேர்ந்த 4 எம்​.பி.க்​கள் தீர்​மானத்​துக்கு ஆதர​வாக வாக்​களித்துள்ளனர். இந்தத் தீர்​மானத்​தின் மீது செனட் அவை​யில் விரை​வில் வாக்கெடுப்பு நடத்​தப்பட உள்​ளது. மொத்​த​முள்ள 100 எம்பிக்களில் ஆளும் குடியரசு கட்​சிக்கு 53 எம்​பிக்​கள் உள்ளனர். ஜனநாயக கட்​சிக்கு 45 எம்​பிக்​கள் மட்​டுமே உள்ளனர். பிரதிநிதிகள் அவை போன்று செனட் அவையிலும் ஆளும் குடியரசு கட்​சியை சேர்ந்த சில எம்​பிக்​கள் தீர்​மானத்​துக்கு ஆதரவு அளிக்​கக்​கூடும் என்று கூறப்​படு​கிறது. ஒரு​வேளை செனட் அவை​யில் தீர்​மானம் நிறைவேற்றப்பட்​டாலும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது சிறப்பு அதி​காரத்தைப் பயன்​படுத்தி தீர்​மானத்தை ரத்து செய்ய முடி​யும் என்பது குறிப்பிடத்தக்கது.


Hindu Tamil 1 hour ago
Home Flash News