பெத்தி படத்தின் முதல் நாள் வசூல்
நடிகர் ராம் சரண் நடித்துள்ள பெத்தி படத்தின் முதல் நாள் வசூல் குறித்து படக்குழு அறிவித்துள்ளது. இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் நடிகர் ராம் சரண் நடித்த பெத்தி திரைப்படம் வியாழக்கிழமையில் (ஜூன் 4) வெளியானது.
படத்தில் ராம் சரணுடன் சிவராஜ்குமார், ஜான்வி கபூர், திவ்யேந்து, ஜெகபதி பாபு, பொம்மன் இரானி ஆகியோர் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ், சுகுமார் ரைட்டிங்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், உலகம் முழுவதும் வெளியான பெத்தி படம், முதல் நாளிலேயே ரூ. 135.36 கோடிக்கும் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.