தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய சட்டப்பேரவை..!
17வது தமிழக சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடர் இன்று கூடியது.. இந்நிலையில் சட்டமன்றத்திற்கு திமுக எம்.எல்.ஏக்கள் வரும் போது அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்திருந்தனர். தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்பதை சுட்டிக் காட்டும் வகையில் இப்படி செய்திருக்கின்றனர். அதில் ”வாயை திறங்க CM” என்ற வார்த்தைகள் இடம்பெற்றிருக்கின்றன.
கடந்த தி.மு.க ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி இருந்தார். இதனால் அவருக்கு முதல் இருக்கை அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போதைய தவெக ஆட்சியில் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளார். அந்த இடத்தை திமுக பெற்றுள்ளது. எதிர்க்கட்சி தலைவராக உதயநிதி ஸ்டாலின் உள்ளார். இந்நிலையில் எதிர்க்கட்சிகள் வரிசையில் எடப்பாடி பழனிசாமிக்கு 5வது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கு பிறகு தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரை முழுமையாக வாசிக்கப்பட உள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக தேசிய கீதம் வாசிப்பது உள்ளிட்ட காரணங்களால் ஆளுநர் உரையை முழுமையாக படிக்காமல் வெளியேறினார்.
தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் த.வெ.க அரசின் கூட்டத்தொடர் தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்து உடன் தொடங்கியது தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடர். இதையடுத்து ஆளுநர் அர்லேகர் உரை தொடங்கியது. அதில் பெரியார், அம்பேத்கர், காமராஜர், அண்ணா பெயரை சுட்டிக் காட்டினார்.
கட்சி தொடங்கி இரண்டு ஆண்டுகள் மட்டுமே ஆகும் நிலையில் மக்களின் பெரும் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது தமிழக வெற்றிக் கழகம் விஜய்யால் மட்டுமே தமிழகத்தை ஆள முடியும் என மக்கள் தீர்ப்பளித்துள்ளனர்; சட்டமன்றத்தில் மக்களுக்காக விவாதிப்பீர்கள் என நம்புகிறேன்
எம்.ஜி.ஆர் 1977ஆம் ஆண்டு நிகழ்த்திய புரட்சியை போல 2026ல் புதிய புரட்சி ஏற்பட்டிருக்கிறது. 74 ஆண்டுகால வரலாற்றில் கூட்டணி ஆட்சி மூலம் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது என ஆளுநர் அர்லேகர் உரையில் தெரிவித்துள்ளார்.
விசில் புரட்சியின் மூலம் புதிய வரலாறு படைத்திருக்கிறது. பல தடைகளை தாண்டி 2 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்து தவெக அரசு சாதனை படைத்துள்ளது. மாநில உரிமை, பெண்கள், குழந்தைகள் நலனை முன்னிறுத்தி இந்த அரசு செயல்படும் என ஆளுநர் அர்லேகர் உரையில் தெரிவித்துள்ளார்.
"தமிழக வெற்றிக் கழகம் வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், காமராஜர், ராணி வேலுநாச்சியார், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் வழியில் இந்த அரசு செயல்படும்" சட்டப்பேரவையில் ஆளுநர் அர்லேகர் உரை.
தமிழ்நாட்டிற்கு அளிக்க வேண்டிய பல்வேறு நிதி தொடர்பாக ஒன்றிய அரசிடம் முதலமைச்சர் கோரிக்கை வைத்துள்ளார். மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி அளிக்க வேண்டும். ஒன்றிய அரசு இதை பரிசீலனை செய்து அனுமதி அளிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது"