Select Location
All Locations
State
Region
City / District
முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!

முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு! திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு!

சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்யின் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில் பின்னர் வெளிநடப்பு செய்தனர். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதல்வர் விஜய் பதிலளித்து சட்டப்பேரவையில் பேசி வருகிறார்.

அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு, மின் வெட்டு, போதைப்பொருள் புழக்கம், பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்கள் குறித்துப் பேசினார். இவை அனைத்திற்கும் கடந்த திமுக அரசுதான் காரணம் என்றும் 10 மாதங்களாக சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை, தவெக அரசு தான் டிஜிபியை நியமித்தது என்றும் திமுக அரசை முதல்வர் கடுமையாக விமர்சித்தார். மேலும் டாஸ்மாக்கில் கட்சி நிதி என்ற பெயரில் வசூலித்தனர் என்றும் முதல்வர் கூறினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏக்கள் பேரவையில் அமளியில் ஈடுபட்டனர்.

முதல்வர் தனது உரையை முடித்த பிறகு எதிர்க்கட்சித் தலைவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று பேரவைத் தலைவர் தெரிவித்தார். எனினும் திமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். 'முதல்வர் இதுவரை பேசவில்லை என்று எதிர்க்கட்சியினர் கூறினார்கள். ஆனால் இப்போது பேச ஆரம்பித்ததும் அமளியில் ஈடுபடுகின்றனர்' என்று அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்தார். இறுதியாக மேலும் திமுக அரசை முதல்வர் விமர்சித்த நிலையில் திமுக எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.


Dinamani 1 hour ago
Home Flash News