Select Location
All Locations
State
Region
City / District
இந்திய அணி உடனான டி20 கிரிக்கெட் தொடர்: ஹாரி ப்ரூக் தலைமையில் இங்கிலாந்து அணி அறிவிப்பு

இந்திய அணி உடனான டி20 கிரிக்கெட் தொடர்: ஹாரி ப்ரூக் தலைமையில் இங்கிலாந்து அணி அறிவிப்பு

லண்டன்: இந்திய கிரிக்கெட் அணி உடனான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி ஹாரி ப்ரூக் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 17 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணி, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாட்டுக்கு பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதில் அயர்லாந்து அணி உடன் இரண்டு டி20 போட்டிகள் மற்றும் இங்கிலாந்து அணி உடன் ஐந்து டி20 போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது.

அயர்லாந்து அணி உடன் வரும் 26, 28 ஆகிய தேதிகளில் இந்தியா விளையாடுகிறது. அதன் பின்னர் ஜூலை 1 முதல் ஜூலை 19 வரையில் இங்கிலாந்தில் டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுகிறது. இந்நிலையில், இந்தியா உடனான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான அணியை இங்கிலாந்து ஆடவர் கிரிக்கெட் அணி தேர்வாளர் மார்க்கர் நார்த் அறிவித்தார். இதில் பல்வேறு டி20 கிரிக்கெட் தொடர்களில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேம்ஸ் கோல்ஸ் இடம்பிடித்துள்ளார். இந்த தொடர் மூலம் இவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அறிமுகமாகிறார்.

காயம் காரணமாக பிரைடன் கார்ஸ் மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகியோர் இந்த தொடரில் விளையாடவில்லை. ஜோர்டான் காக்ஸ், சோனி பேக்கர், சகிப் முகமது ஆகியோர் அணியில் மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளனர். இங்கிலாந்து அணி விவரம் ஹாரி ப்ரூக் (கேப்டன்), ரிஹான் அகமது, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜோர்டான் காக்ஸ், சோனி பேக்கர், சகிப் முகமது, டாம் பேன்டன், ஜேக்கப் பெத்தல், ஜாஸ் பட்லர், ஜேம்ஸ் கோல்ஸ், சாம் கரன், லியாம் டாசன், வில் ஜேக்ஸ், ரஷீத், பில் சால்ட், ஜோஷ் டங், லுக் வுட்.


Hindu Tamil 1 hour ago
Home Flash News