Select Location
All Locations
State
Region
City / District
சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையடுத்து தமிழக சட்டப்பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. தவெக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜூன் 18 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது.

தொடர்ந்து ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது ஜூன் 19, 22 ஆகிய இரு நாள்கள் விவாதம் நடைபெற்றது. பின்னர், இன்று பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதல்வர் விஜய் பதிலளித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு, மின் வெட்டு, போதைப்பொருள் புழக்கம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்துப் பேசிய முதல்வர், இவை அனைத்திற்கும் கடந்த திமுக அரசுதான் காரணம் என்றும் 10 மாதங்களாக தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு டிஜிபியே இல்லை, தவெக அரசு தான் டிஜிபியை நியமித்தது என்றும் திமுக அரசை முதல்வர் கடுமையாக விமர்சித்தார்.

மேலும் டாஸ்மாக்கில் கட்சி நிதி என்ற பெயரில் வசூலித்தனர் என்றும் முதல்வர் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏக்கள் பேரவையில் அமளியில் ஈடுபட்டு பின்னர் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து தவெக அரசில் இந்த 40 நாள்களில் செய்தவற்றை பட்டியலிட்டும் பேசினார். முதல்வர் பேசிய பிறகு ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் அறிவித்தார்.


Dinamani 1 hour ago
Home Flash News