பிருத்விராஜின் கலிஃபா படப்பிடிப்பு நிறைவு!
நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் உருவாகும் கலிஃபா திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இயக்குநர் வைசாக் இயக்கத்தில் பெரிய பட்ஜெட்டில் உருவான கலிஃபா திரைப்படத்தில் நாயகனாக நடிகர் பிருத்விராஜ் நடிக்க அர்ஜுன் தாஸ், ஷைன் டாம் சாக்கோ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஜேக்ஸ் பிஜாய் இசையமைக்கும் இப்படத்தில் நடிகர் மோகன்லால் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். கலிஃபா வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஓணம் வெளியீடாகத் திரைக்கு வரவுள்ளதால் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.