Select Location
All Locations
State
Region
City / District
உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!

உலக சாதனை படைத்த மெஸ்ஸி: நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறிய அர்ஜென்டினா!

ஆஸ்திரியா உடனான போட்டியில் 2 கோல்கள் அடித்து உலக சாதனை படைத்த மெஸ்ஸி அர்ஜென்டினா அணியை நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேற்றினார். ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் ஜே பிரிவு அணிகளுக்கான ஆட்டம் நேற்று இரவு நடைபெற்றது. அர்ஜென்டினா - ஆஸ்திரியா அணிகள் போதிய இந்த ஆட்டம் டல்லாஸ் மைதானத்தில் நடைபெற்றது.

ஆட்டம் தொடங்கிய 6-வது நிமிடத்தில் பெனால்டி பாக்ஸிற்குள் அர்ஜென்டினா வீரர் லௌதாரோ மார்டினெஸ் ஃபவுல் வாங்கினார். அதைத் தொடர்ந்து, 9-வதி நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை மெஸ்ஸி தவறவிட்டார். முதல் பாதி முடிவுக்கு முன்னர் ஃபாகுண்டோ மெடினா அடித்த பாஸை எதிரணியை திணறடித்துப் பெற்ற மெஸ்ஸி, அதை லாவகமாக கீழ் மூலையில் தள்ளி கோலாக்கினார். இதன்மூலம், உலகக் கோப்பை வரலாற்றில் 17 கோல்களுடன் அதிக கோல் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார். ஆஸ்திரியா கோல் அடிக்கத் திணறினாலும் அர்ஜென்டினா வீரர்கள் கோலடிப்பதை முடிந்த வரை தடுத்து வந்தனர்.

இறுதி நிமிடங்களில், அர்ஜென்டினா வீரர் ஜூலியன் அல்வரெஸ் அடித்த ஷாட் தடுக்கப்பட்ட நிலையில் மெஸ்ஸி உடனடியாக அந்தப் பந்தை கோலாக்கினார். இதனைத் தொடர்ந்து, அர்ஜென்டினா அணி 2-0 என்கிற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தி வெற்றிபெற்றது. தனது இறுதி நிமிட கோலின் மூலம், தனது வரலாற்றுச் சாதனையில் மேலும் ஒரு கோலை சேர்த்தார் மெஸ்ஸி. உலகக் கோப்பைத் தொடர்களில் இதுவரை 18 கோல்கள் அடித்துள்ள மெஸ்ஸி அதிக கோல்கள் அடித்த வீரராக சாதனை படைத்துள்ளார்.

இந்தத் தொடரில் மெஸ்ஸி இதுவரை 4 கோல்கள் அடித்துள்ளார்.


Dinamani 1 hour ago
Home Flash News