Select Location
All Locations
State
Region
City / District
மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் ராஜினாமா..!!

மத்திய அமைச்சர் ஜார்ஜ் குரியன் ராஜினாமா..!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த மூத்த பாஜ தலைவர் ஜார்ஜ் குரியன். இவர் சிறுபான்மையினர் நலத்துறை மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்தார். ராஜ்யசபா எம்.பி.யாக இருந்த இவரது பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து, தனது மத்திய அமைச்சர் பதவியை அவர் ராஜினாமா செய்தார்.அவரது ராஜினாமாவை ஜனாதிபதி மாளிகை ஏற்றுக்கொண்டது. பாஜ தொடங்கப்பட்டது முதல் கட்சியில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் மூத்த தலைவர்களில் ஒருவர்.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரான குரியனின் பதவிக்காலம் ஜூன் 21 அன்று முடிவடைந்தது. இதன் விளைவாக, அவர் சிறுபான்மையினர் விவகாரங்கள் மற்றும் மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளம் ஆகிய துறைகளின் மத்திய இணை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். சமீபத்தில் நடந்த கேரள மாநில சட்டமன்றத் தேர்தலில் கேரளாவின் கஞ்சிரப்பள்ளி தொகுதியில் போட்டியிட்ட ஜார்ஜ் குரியன் வெற்றி பெறத் தவறியதால், அவருக்கு மீண்டும் ராஜ்யசபா எம்பி சீட் வழங்க கட்சித் தலைமை மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது.


Smacy News 1 hour ago
Home Flash News