தமிழகத்துக்கு 40 டிஎம்சி காவிரி நீர் திறக்க ஆணை
தமிழ்நாட்டுக்கு காவிரியில் 40 டிஎம்சி நீர் தர கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் ஆணையிட்டுள்ளது.
தமிழ்நாட்டுக்கு காவிரியில் 40 டிஎம்சி நீர் தர கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் ஆணையிட்டுள்ளது. ஜூன் மாதத்துக்கு 9.1 டிஎம்சி, ஜூலை மாதத்துக்கு 31.2 டிஎம்சி என 40 டிஎம்சி நீர் திறக்க டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் கர்நாடகாவுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக டெல்லியில் இன்று நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் 52ஆவது கூட்டத்தில் ஜூன், ஜூலை மாதத்திற்கு மொத்தமாக 40 டிஎம்சி காவிரி நீர் தேவை என தமிழக அரசு வலியுறுத்தியிருந்தது. மேலும் கோடை காலங்களில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக நீரை கர்நாடகா பயன்படுத்திவிட்டு, நீர்தேக்கங்களில் குறைந்த அளவே நீர் இருப்பதாக கூறுவதை ஏற்கமுடியாது என்றும் தமிழக அரசு கூறியிருந்தது குறிப்பிடதக்கது.