Select Location
All Locations
State
Region
City / District
எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!

எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, முன்னாள் பொறியாளர்கள் உள்பட 11 பேர் மீது 8 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு சாலை விரிவாக்கம் தொடர்பாக சங்கரானந்த் இன்ப்ரா நிறுவனத்திற்கான டென்டரில் முறைகேடு என புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.

தமிழகத்தின் முன்னாள் அமைச்சரும், திமுகவின் சட்டப்பேரவை கொறடாவுமான எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதி.ரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது வீடு , திருவண்ணாமலையில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்கள் உட்பட மொத்தம் 13 இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. 2006 முதல் 2011 வரை அமச்சராக பதவி வகித்த காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக எ.வ. வேலு மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது. அந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வருகிறது.

இந்த சோதனையில் பணப்பரிமாற்றம் தொடர்பான ஆவணங்கள் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. எனினும் சோதனை முழுமையாக நிறைவடைந்த பிறகே முழுமையானத் தகவல்கள் தெரியவரும். இத்துடன் முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Dinamani 1 hour ago
Home Flash News