முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கிற்கு சமூக நீதி வணக்கம்! முதல்வர் விஜய்
முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கின் சமூக நீதிக்கான பங்களிப்பு அரசியல் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும் என முதல்வர் ஜோசப் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார்.
இந்தியாவில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டை பெற்றுத் தந்தவர், சமூக நீதிக்காக பாடுபட்டவர் என்பதால் 'சமூக நீதிக் காவலர்' என்று போற்றப்படுகிறார். வி.பி. சிங் பிறந்த நாளையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் அவரை நினைவுகூர்ந்து பதிவிட்டு வருகின்றனர். முதல்வர் ஜோசப் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில்,
"எளிமை, நேர்மை மற்றும் கொள்கைப் பற்றுடன் அரசியல் வாழ்வை முன்னெடுத்த முன்னாள் பிரதமர் வி.பி. சிங் அவர்களின் பிறந்தநாளில், அவருக்கு எனது சமூக நீதி வணக்கம். சமூக நீதிக்கான அவரது பங்களிப்பும், சமத்துவமான சமூகத்தை உருவாக்குவதற்கான அவரது அர்ப்பணிப்பும் இந்திய அரசியல் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.