Select Location
All Locations
State
Region
City / District
பொறியியல் கலந்தாய்வு பட்டியல்- உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்டார்

பொறியியல் கலந்தாய்வு பட்டியல்- உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்டார்

பொறியியல் கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்டார். அதன்படி, பொறியியல் கலந்தாய்வு தரவரிசை பட்டியலை tneaomline.org-ல் தெரிந்து கொள்ளலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து அமைச்சர் கூறியதாவது:- பொறியியல் கல்லூரியில் சேர 3.02 லட்சம் பேர் பதிவு செய்த நிலையில் 2.45 லட்சம் பேர் பதிவு கட்டணம் செலுத்தியுள்ளனர். இதில், 1.30 லட்சம் மாணவர்கள், 1.05 லட்சம் மாணவிகள், மூன்றாம் பாலினத்தவர் 5 பேர் கொண்ட தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது. அரசு பள்ளிக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டில் 50,494 மாணவர்கள் விண்ணப்பம், இதில் 46,604 மாணவர்கள் பட்டியலில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விளையாட்டு வீரர்கள் பிரிவில் 3210, ராணுவ வீரர்கள் வாரிசு 1176, மாற்றுத்திறனாளிகள் 500 பேர் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். தரவரிசை பட்டியலில் பெயர் விடுபட்டிருந்தால் பிரச்சனை இருந்தால் 6ம் தேதிக்குள் மாணவர்கள் அணுகலாம். அருகில் உள்ள பொறியியல் கல்லூரிகளை அணுகி மாணவர்கள் குறைகளை பதிவிடலாம். பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களில் 53 பேர் 200-க்கு 200 கட் ஆப் பெற்றுள்ளனர். பொறியியல் கல்விக்கான பொது கலந்தாய்வு ஜூலை 13ம் தேதி தொடங்கும். பொறியியல் தரவரிசை பொதுப்பிரிவில் தருமபுரி மாணவி அக்‌ஷிதா முதலிடம் பிடித்துள்ளார். திருப்பூர் மாணவி ரோகித் பாலன் 2ம் இடம், நாமக்கல் மாணவன் வெங்கட கிருஷ்ணன் 3ம் இடம் பிடித்துள்ளனர். அரியலூர் மாணவி ரக்‌ஷிதா 4ம் இடம் பிடித்துள்ளார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.


Malaimalar 1 hour ago
Home Flash News