Select Location
All Locations
State
Region
City / District
மகளிர் டி20 உலகக் கோப்பை: 5வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து

மகளிர் டி20 உலகக் கோப்பை: 5வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இங்கிலாந்து

மகளிர் டி20 உலக கோப்பை தொடரில் நேற்று நடந்த அரையிறுதியில் இங்கிலாந்து அணி வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 10-வது மகளிர் டி20 உலகக் கோப்பை தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது.

லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று நடந்த 2-வது அரையிறுதியில் இங்கிலாந்து அணி, தென் ஆப்பிரிக்கா உடன் மோதியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 169 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் நாட் சீவர் பிரண்ட் 75 ரன்னும், ஹீதர் நைட் 58 ரன்னும் எடுத்தனர். அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இங்கிலாந்து அணி 40 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறி அசத்தியது. ஆட்ட நாயகி விருது நாட் சீவர் பிரண்டுக்கு வழங்கப்பட்டது.

வரும் 5-ம் தேதி நடைபெறும் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.


Malaimalar 1 hour ago
Home Flash News