திருவண்ணாமலை நிர்வாகிகளுடன் இபிஎஸ் தீவிர ஆலோசனை!
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசணை மேற்கொண்டு வருகின்றனர். மதுராந்தகம் (தனி) தொகுதி இடைத்தேர்தல் தொடா்பாக அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தியிருந்தார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், செங்கல்பட்டு கிழக்கு,மேற்கு மாவட்டங்களின் நிர்வாகிகள், மாவட்டச் செயலர்கள், முன்னாள் அமைச்சர்கள், பேரவைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று இருந்தனர். இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகளுடன் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி இன்று(ஜூலை 4) ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தேர்தல் தோல்வி, கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட வாரியாக ஆலோசனை நடத்தி வரும் எடப்பாடி பழனிசாமி, இன்று காலையில் திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகளுடனும், பிற்பகலில் அரியலூர், பெரம்பலூர் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபடுகிறார்
இடைத்தேர்தலில் அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றும், அதற்கான பணிகளை தற்போதே மேற்கொள்ள வேண்டும் என்று தொண்டர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகின்றது.