Select Location
All Locations
State
Region
City / District
முக்கிய பிரச்சனை கையில் எடுத்த பா.ஜ.க..! ஜான் ஆரோக்கியசாமி,விஷ்ணுரெட்டி மீது ஆளுநரிடம் பா.ஜ.க. புகார்..!

முக்கிய பிரச்சனை கையில் எடுத்த பா.ஜ.க..! ஜான் ஆரோக்கியசாமி,விஷ்ணுரெட்டி மீது ஆளுநரிடம் பா.ஜ.க. புகார்..!

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி பங்கேற்றது குறித்து, தமிழக ஆளுநரிடம் நயினார் நாகேந்திரன் புகார் அளித்துள்ளார். தமிழக ஆளுநர் சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது:-

உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் குழந்தைகளுடன் நடந்து கொண்ட விதம் குறித்தும், அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர்கள் அல்லாத தனிநபர்கள் ஜான் ஆரோக்கியசாமியும், விஷ்ணு ரெட்டியும் கலந்து கொண்டிருக்கிறார்கள். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவர்னரிடம் நாங்கள் மனு கொடுத்திருக்கிறோம். அதுமட்டும் அல்லாமல், இந்த அரசு பொறுப்பேற்று 54 நாட்களில், 151 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், 85-க்கும் மேற்பட்ட படுகொலைகள் நடந்திருக்கின்றன. கடந்த கால திமுக அரசுக்கும், இந்த அரசுக்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் இருக்கிறது. முதல்-அமைச்சர் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார் என்று கவர்னரிடம் மனு மூலமாக தெரிவித்திருக்கிறோம். உடனடியாக எல்லாவற்றையும் சரி செய்ய வேண்டும் என்று சொல்லவில்லை. தவெக கட்சியினரே தவறு செய்கிறார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கவர்னர் எந்த வகையிலும், தமிழ்நாடு அரசின் அதிகாரத்தை எடுப்பதற்கு எந்த முயற்சியும் செய்யவில்லை. தவெகவுக்கு பின்புலத்தில் நாங்கள் இல்லை. அப்படி இருந்தால் அவர்கள் மீது குற்றச்சாட்டு வைக்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் யாருக்கும் பின்புலமாக இல்லை. பாரதிய ஜனதா கட்சி அகில இந்திய அளவில் மட்டும் இல்லை. உலக அளவில் மிகப்பெரிய கட்சி. மிகப்பெரிய தலைவரை, மோடியை பெற்றிருக்கிற கட்சி.


Smacy News 1 hour ago
Home Flash News