Select Location
All Locations
State
Region
City / District
பேட்டரி வாகனங்களுக்கு மக்கள் மாற வேண்டும்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அழைப்பு

பேட்டரி வாகனங்களுக்கு மக்கள் மாற வேண்டும்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அழைப்பு

குப்பம்: ஆந்​திர முதல்​வர் சந்​திர​பாபு நாயுடு, சித்​தூர் மாவட்டத்தில் உள்ள தனது குப்​பம் தொகு​தி​யில் 3 நாள் சுற்​றுப்​பயணம் தொடங்​கி​னார். இதில் 2-ம் நாளான நேற்று ரூ.117 கோடி செல​வில் அதிநவீன பஸ் நிலை​யம் மற்​றும் பணிமனைக்கு அடிக்​கல் நாட்டினார்.

இதையடுத்து அங்கு நடை​பெற்ற பொதுக்​கூட்​டத்​தில் அவர் பேசியதாவது: ராயலசீமா மாவட்​டங்​களில் ரூ.1 லட்​சம் கோடி செல​வில் தோட்​டக்​கலை மையம் அமைக்​கப்பட உள்​ளது. இதில் தனியார் ரூ.60 ஆயிரம் கோடியும், அரசு ரூ.40 ஆயிரம் கோடியும் முதலீடு செய்​ய உள்​ளன.

பெட்​ரோல், டீசல் வாக​னங்​களுக்கு பதிலாக இனி பேட்​டரி வாக​னங்​களை மக்​கள் பயன்​படுத்த வேண்​டும். ஸ்கூட்​டர்​கள், கார்​கள், பேருந்​துகள் எல்​லாம் பேட்​டரி​யில் இயங்க வேண்​டும். அப்​போது தான் சுற்​றுச்சூழல் மேன்மை அடை​யும். விரை​வில் ஆந்​திர அரசு பேருந்​துகள் சூரிய சக்தி மூலம் இயங்​கும்.

பிரபல ‘அடி​தாஸ்’ நிறு​வனம் ஆந்​தி​ரா​வுக்கு வரவுள்​ளது. இதன் மூலம் 20 ஆயிரம் பேருக்கு வேலை​வாய்ப்பு கிடைக்​கும். இவ்​வாறு முதல்வர் சந்​திர​பாபு நாயுடு பேசி​னார்.


Hindu Tamil 2 hours ago
Home Flash News