Select Location
All Locations
State
Region
City / District
உயர்கல்வித்துறை அமைச்சர், அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை

உயர்கல்வித்துறை அமைச்சர், அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை

சென்னை தலைமைச் செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் ஆலோசனை நடத்தினார்.

பட்ஜெட் தாக்கல்

தமிழக சட்டசபையில் இம்மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதைத் தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் கடந்த 2-ந்தேதியில் இருந்து துறைவாரியாக அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

முதலமைச்சர் விஜய் ஆலோசனை

இதைத்தொடர்ந்து இன்று உயர்கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதில் அமைச்சர் விஸ்வநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். உயர்கல்விதுறையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவது, சர்வதேச அளவிலான உயர்கல்வி நிறுவனங்களுடன் பாடத்திட்ட பரிமாற்றங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

பல்கலைக்கழக வேந்தர் விவகாரம், உயர்கல்வித்துறையில் அரசின் கொள்கை முடிவுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்படும். துணை வேந்தர்கள் நியமனம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும். நிதி நெருக்கடியில் உள்ள அரசு பல்கலைக்கழகங்களில் நிதிநிலையை சீர் செய்வதற்கான திட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்படும். இது தொடர்ந்து வணிக வரித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் விஜய் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.


Malaimalar 1 hour ago
Home Flash News