Select Location
All Locations
State
Region
City / District
நடிகர் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் 200% வெற்றி பெறும்! தயாரிப்பாளர் பேச்சு

நடிகர் சூர்யாவின் விஸ்வநாத் அண்ட் சன்ஸ் 200% வெற்றி பெறும்! தயாரிப்பாளர் பேச்சு

சூர்யா நடிப்பில் உருவான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெரும் என படத்தின் தயாரிப்பாளர் கூறியுள்ளார். தயாரிப்பாளர் நாக வம்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து முடித்துள்ள திரைப்படம் விஸ்வநாத் அண்ட் சன்ஸ். இப்படம் ஆக. 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. நாயகியாக மமிதா பைஜூ நடித்துள்ளார்.

கருப்பு திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின் வெளியாகும் சூர்யாவின் திரைப்படமென்பதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. மேலும், 40 வயது நாயகனுக்கும் 20 வயது நாயகிக்குமான காதல் கதையாக உருவாகியுள்ளதால் சுவாரஸ்யமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளரான நாக வம்சி நிகழ்வு ஒன்றில் பேசியபோது, “நடிகர் சூர்யா நடிப்பில் உருவான விஸ்வநாத் அண்ட் சன்ஸ் திரைப்படத்தை முழுமையாகப் பார்த்துவிட்டேன். இது கண்டிப்பாக 200 சதவீத வெற்றியைப் பெறும். குடும்ப படமாகவே உருவாகியுள்ளதால் ரசிகர்கள் நன்றாக ரசிப்பார்கள். இப்படத்தை மிகப்பெரிய அளவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.


Dinamani 1 hour ago
Home Flash News