Select Location
All Locations
State
Region
City / District
சென்னையில் சொத்து வரி செலுத்தாத நிறுவனங்கள் பட்டியல் வெளியீடு

சென்னையில் சொத்து வரி செலுத்தாத நிறுவனங்கள் பட்டியல் வெளியீடு

சென்னை: 2025-26 நிதி ஆண்டின் இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரியை செலுத்தாத நிறுவனங்களின் பட்டியலை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. மொத்தமாக 90க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ரூ. 27.31 கோடி வரி பாக்கி வைத்துள்ளதாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் சொத்து வரி, தொழில் வரி ஆகியவை பிரதான வருவையாக உள்ளது. சுமார் 13.5 லட்சம் சொத்து உரிமையாளர்கள் மூலமாக மாநகராட்சிக்கு சொத்து வரி கிடைக்கிறது. அதன்படி சென்னை மாநகராட்சி முதல் அரை ஆண்டு சொத்து வரி 2025 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் செப்டம்பர் 30ஆம் தேதி வரையிலும் இரண்டாவது அரையாண்டிற்கான சொத்துவரியை 2025 அக்டோபர் 1 முதல் 2026 மார்ச் 31 வரையிலும் செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி தெரிவித்திருந்தது.

அதன் அடிப்படையில் 2025-26 ஆம் ஆண்டிற்கான நிதியாண்டில் 90க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இரண்டரை ஆண்டிற்கான சொத்துவரி பாக்கி வைத்துள்ளதாக மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி சிடிஎஸ் ஸ்டாண்டர்ட் டவர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 2.42 கோடி அளவிற்கான சொத்து வரியை பாக்கி வைத்திருப்பதாகவும், சரவணா ஸ்டோர்ஸ் தங்கநகை மாளிகை நகைக்கடை 1.64 கோடி ரூபாய்க்கான சொத்து வரியை பாக்கி வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025 அக்டோபர் 1 முதல் 2026 மார்ச் 31 வரையிலான வரியை செலுத்த வார்டு அலுவலகங்களில் கடந்த 3 ஆம் தேதி முதல் வரும் 17ஆம் தேதி வரை காலை 8 மணி தொடங்கி மாலை 6 மணி வரைக்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாம்களை பயன்படுத்தி அனைவரும் தங்களுடைய சொத்து வரியை செலுத்தவும் மாநகராட்சி அறிவித்துள்ளது.


Dinakaran 1 hour ago
Home Flash News