Select Location
All Locations
State
Region
City / District
கடல் நீரை குடிநீராக்கும் திட்ட விரிவாக்கம் - முதலமைச்சர் ஆய்வு

கடல் நீரை குடிநீராக்கும் திட்ட விரிவாக்கம் - முதலமைச்சர் ஆய்வு

செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்ட விரிவாக்கம் குறித்து முதலமைச்சர் விஜய் நேரில் ஆய்வு செய்தார். செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்காக ரூ.4,276.44 கோடியில் மூன்றாவது புதிய குடிநீர் ஆலை அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது. இங்கு தினமும் 40 கோடி லிட்டர் கடல்நீரை சுத்திகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் 22 லட்சம் மக்கள் பயனடைவர். பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தியுள்ள முதலமைச்சர் விஜய், விரிவாக்கம் குறித்து பேட்டரி வாகனத்தில் சென்று நேரில் ஆய்வு செய்தார். நாளொன்றுக்கு 1,230 மில்லியன் லிட்டர் குடிநீரை வழங்கும் திட்டத்தின் செயல்பாடு, உற்பத்தி திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.


Smacy News 1 hour ago
Home Flash News