Select Location
All Locations
State
Region
City / District
மிஷ்கின் இயக்கிய டிரெயின் திரைப்படத்தின் டீசர் தேதி!

மிஷ்கின் இயக்கிய டிரெயின் திரைப்படத்தின் டீசர் தேதி!

நடிகர் விஜய் சேதுபதி நடித்த டிரெயின் திரைப்படத்தின் டீசர் தேதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடித்த திரைப்படம் டிரெயின். முழுப்படம் ஓடும் ரயிலில் நடப்பது போல் எடுக்கப்பட்ட இப்படத்தில், நடிகர்கள் நாசர், ஷ்ருதி ஹாசன், யுகி சேது, நரேன், கே.எஸ். ரவிக்குமார், கலையரசன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

மிஷ்கின் இசையமைத்துள்ள இப்படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரித்துள்ளார். நீண்ட நாள்களாக இப்படம் வெளியீட்டைக் காணாமல் இருக்கிறது. சில நிதி பிரச்னைகளே காரணம் என்றும் கூறப்பட்டது.

இந்த நிலையில், டிரெயின் திரைப்படத்தின் டீசர் மற்றும் இசை வெளியீட்டு நிகழ்வு ஜூலை 12 ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு சென்னையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, மிஷ்கின் இயக்கிய பிசாசு - 2 திரைப்படமும் திரைக்கு வராமல் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Dinamani 1 hour ago
Home Flash News