Select Location
All Locations
State
Region
City / District
சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து கொண்டார் ஜானிக் சின்னர்..

சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து கொண்டார் ஜானிக் சின்னர்..

விம்பிள்டன் தொடரின் இறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியனான ஜானிக் சின்னர், அலெக்சாண்டர் ஸ்வரேவை எதிர்கொண்டார். போட்டி தொடங்கியது முதல் ஸ்வரேவ் ஆதிக்கம் செலுத்தினார். நீண்ட நேரம் நடைபெற்ற முதல் செட்டை டை பிரேக்கர் மூலம் 7-6 என கைப்பற்றினார். பின்னர் இரண்டாவது செட்டில் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. எனினும் இரண்டாவது செட்டை சின்னர் கைப்பற்றி பதிலடி கொடுத்தார். தொடர்ந்து மூன்றாவது செட்டில் ஸ்வரேவுக்கு கால் பகுதியில் காயம் ஏற்பட்டது.

3-ஆவது செட்டை சின்னர் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதனையடுத்து 4வது செட்டில் முன்னிலை பெற வேடிய கட்டாயத்தில் ஆடிய ஸ்வரேவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இந்த செட்டையும் 6-4 என ஜானிக் சின்னர் கைப்பற்றிய நிலையில், 6-7, 7-6, 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று விம்பிள்டன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார். கடந்த 2025ஆம் ஆண்டும் முதல் முறையாக விம்பிள்டன் பட்டத்தை கைப்பற்றிய சின்னர், இந்த முறையும் வென்று அசத்தியுள்ளார். இதன்மூலம் சின்னர் விம்பிள்டன் தொடரை தொடர்ந்து 2-ஆவது முறையாக கைப்பற்றிய 10வது வீரர் என்ற சாதனை படைத்தார்.


Smacy News 1 hour ago
Home Flash News