விஜய் அரசு அதிரடி..! லஞ்சம் கேட்டால் புகார் அளிக்க வாட்ஸ்அப் எண் அறிவிப்பு.
அரசு அலுவலகங்களில் லஞ்சம் கேட்பது அல்லது வாங்குவது குறித்து புகார் அளிக்க தமிழக அரசு புதிய வாட்ஸ்அப் உதவி எண்ணை வெளியிட்டுள்ளது. இந்த எண்ணை தலைமைச் செயலாளர் சாய் குமார் அறிமுகப்படுத்தியுள்ளார்.
இந்த எண்ணிற்கு லஞ்சம் கேட்பது தொடர்பான புகார்கள், ஆடியோ, அல்லது வீடியோ ஆதாரங்களை பொதுமக்கள் அனுப்பலாம்.
அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்கப்பட்டால் புகார் அளிக்க வாட்ஸ்அப் உதவி எண் 94981 80936 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது தொடர்பாக தலைமைச் செயலாளர் சாய் குமார் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அனைத்து அரசு துறைகளில் இணையதளத்தில் இந்த வாட்ஸ்அப் எண் இடம் பெற வேண்டும் என்றும் அதனுடன் லஞ்ச ஒழிப்பு துறையின் இணையதளத்தில் இணைப்பும் இடம்பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.