Select Location
All Locations
State
Region
City / District
கோவையில் பரபரப்பு: திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் கவுன்சிலர் பாபு..!

கோவையில் பரபரப்பு: திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார் கவுன்சிலர் பாபு..!

கோவை மாநகராட்சியின் 22-வது வார்டு திமுக கவுன்சிலரான பாபு, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளார்.

கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

 இளைஞர்களுக்கும் இடமில்லை; திமுகவில் எளியவர்களுக்கும் இடமில்லை. எனவே, இனியும் திமுகவில் தொடர்வதில் அர்த்தம் இல்லை என்கிற முடிவோடு இன்றிலிருந்து நானும் எனது நண்பர்களும் திமுகவிலிருந்து விலகுகிறோம்.

திமுக சாமானியர்களின் கட்சியாக இல்லை. அது ஒரு கார்ப்பரேட் கம்பெனியாக மாறி இருக்கிறது. இங்கே சாமானியன் ஒருவன் வெறும் வாக்காளனாகவோ அல்லது கட்சியின் அடிமட்டத் தொண்டனாகவோ இருக்கலாமே தவிர எந்தக் காலத்திலும் உண்மையான மக்கள் தொண்டாற்றுகிற பொறுப்புக்கோ

உயர் பதவிக்கோ வரவே முடியாது என்கிற அளவிற்கு கட்சியும் கட்சித் தலைமையும் சாமானியர்களுக்கு எட்டாத உயரத்தில் இருக்கிறது. இப்போதும் கூட எதிர்கட்சித் தலைவராக உதயநிதியும் மூத்த தலைவர்கள் அவர் பின்னாலும் நிற்கிறார்கள். இது எப்படி சமூக நீதியாகும்? மன்னர் ஆதிக்கமாக, முதலாளித்துவ கட்சியாக திமுக மாறிப் போனதற்கு இதுவே அடையாளமாகும்.


Smacy News 1 day ago
Home Flash News