நெய் விலையில் மாற்றமில்லை: விற்பனையாளர்களுக்கான கமிஷன் குறைப்பு வாபஸ் - ஆவின் அறிவிப்பு
சென்னை: ஆவின் நெய் விலை உயர்த்தப்படவில்லை என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், மொத்த விற்பனையாளர்களுக்கான கமிஷன் குறைப்பு உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்யும் பணியில், தமிழக அரசின் ஆவின் நிறுவனம் ஈடுபடுகிறது.
ஆவின் நிறுவனம், பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பாலை கொள்முதல் செய்து, அதை பதப்படுத்தி பல்வேறு வகைகளில் விநியோகம் செய்கிறது. இதற்கிடையில், ஆவின் நெய் தொடர்பான பில்லிங் விலை மற்றும் கமிஷன் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக, ஆவின் நிறுவனம் கடந்த 14-ம் தேதி அறிவித்திருந்தது.
இதுகுறித்து, ஆவின் நிறுவன மேலாண்மை இயக்குநர் அஜய் யாதவ் வெளியிட்டிருந்த உத்தரவில், “ஆவினின் 500 மில்லி பெட் ஜார் நெய் மொத்த விற்பனையாளர்களுக்கான பில்லிங் விலை ஜிஎஸ்டி உள்பட ரூ.332.42-க்கும், சில்லறை விற்பனையாளர்களுக்கான பில்லிங் விலை ரூ.342.60-க்கும் விற்பனை செய்யப்படும். எனினும், அதிகபட்ச சில்லறை விலையான ரூ.365-ல் மாற்றமில்லை.
அதேபோல, ஒரு லிட்டர் பெட் ஜார் நெய், மொத்த விற்பனையாளர்களுக்கான பில்லிங் விலை ரூ.650.72 ஆகவும், சில்லறை விற்பனையாளர்களுக்கான பில்லிங் விலை ரூ.664.78 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அதேநேரம், அதிகபட்ச சில்லறை விலையான ரூ.700-ல் மாற்றமில்லை.
அட்டைப் பெட்டியில் அடைத்து விற்கப்படும் ஒரு லிட்டர் நெய்க்கான மொத்த விற்பனையாளர்களுக்கான பில்லிங் விலை ரூ.640.72 ஆகவும், சில்லறை விற்பனையாளர்களுக்கான பில்லிங் விலை ரூ.654.78 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனினும், அதிகபட்ச சில்லறை விலை ரூ.690-ல் மாற்றமில்லை.
பால் முகவர்கள் நலச்சங்க தலைவர் பொன்னுசாமி வெளியிட்ட அறிவிப்பில், “பால் முகவர்கள், சில்லறை வணிகர்கள், மொத்த விநியோகஸ்தர்கள் வயிற்றில் அடிக்கும் வகையில், ஆவின் நெய் விலை உயர்வு குறித்த ஆவின் நிர்வாக உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், மொத்த விற்பனையாளர்களுக்கான கமிஷன் குறைப்பு உத்தரவை வாபஸ் பெறுவதாக ஆவின் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “ஆவின் நெய்க்கான மொத்த விற்பனையாளர் கமிஷன் குறைக்கப்பட்டதுடன், நெய்யின் சில்லறை விலையும் உயர்த்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இந்த புதிய பில்லிங் ஜூலை 15-ம் தேதி முதல் அமலுக்கு வரும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த விலைப் பட்டியலை அனைத்து மாவட்ட பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களும் உடனடியாக அமல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதற்கு தமிழக பால் முகவர்கள் நலச்சங்கம் உள்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.