Select Location
All Locations
State
Region
City / District
பிக் பாஸ் சிபி நடித்த ஈகோ ராமன் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

பிக் பாஸ் சிபி நடித்த ஈகோ ராமன் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

பிக் பாஸ் பிரபலம் சிபி புவனச்சந்திரன் நடித்த, ஈகோ ராமன் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. கணேசன் நாச்சிமுத்து இயக்கத்தில் சிபி புவனச்சந்திரன், கீர்த்தனா, மறைந்த நடிகர் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஈகோ ராமன். 00:00 Previous Play Next 00:00 / 03:02 Mute Settings Fullscreen Copy video url Play / Pause Mute / Unmute Report a problem Language Share Vidverto Player

போட்டித் தேர்வுக்கு படிக்கும் அறிவு (சிபி) என்ற இளைஞனுக்கும், பள்ளி ஆசிரியரான ராமனுக்கும் (ரோபோ சங்கர்) இடையே நடக்கும் ஈகோ மோதலே இந்தத் திரைப்படத்தின் கதை. நகைச்சுவை நடிகராகப் பார்த்த நடிகர் ரோபோ சங்கர், இந்தப் படத்தில் எதிர்மறை பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார். ரெய்மன் ராட்ரிக்ஸ் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இந்த நிலையில், ஈகோ ராமன் திரைப்படம் வரும் ஜூலை 24 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Dinamani 3 hours ago
Home Flash News