மக்கள் அவதி..!! 2வது நாளாக 16 மெட்ரோ நிலையங்கள் மூடல்..!!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்கு எதிராக டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் சிஜேபி இயக்கத்தினர் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வரும் நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
தற்போது பார்லி கூட்டத் தொடர் நடந்து வருவதால், அசம்பாவிதங்களைத் தவிர்க்க டில்லியில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் கூடுதலாக பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தடியடி, கண்ணீர் புகைக்குண்டு வீச்சு மற்றும் போராட்டக்காரர்களின் வன்முறை போன்ற சம்பவங்களால் டில்லி பதற்றம் நிறைந்த பகுதியாக காணப்படுகிறது.இந்தப் போராட்டத்தை கலைப்பதற்கும், கூட்டம் அதிகரிப்பதை தவிர்ப்பதற்கும் தேவையான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டில்லியில் உள்ள 16 மெட்ரோ ரயில் நிலையங்கள் 2வது நாளாக இன்றும் மூடப்படுவதாக மெட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
மூடப்பட்டுள்ள மெட்ரோ நிலையங்களின் விபரம்,
லோக் கல்யாண் மார்க்
ராஜீவ் சவுக்
படேல் சவுக்
ராமகிருஷ்ணா ஆசிரமம் மார்க்
பாராகம்பா சாலை
உச்ச நீதிமன்றம்
சேவா தீர்த்
ஜன்பத்
மண்டி ஹவுஸ்
மத்திய தலைமையகம்
ஐடிஓ
டில்லி கேட்
இந்திரப்பிரஸ்தா
கான் மார்க்கெட்
ஜோர் பாக்
சிவாஜி ஸ்டேடியம்