Select Location
All Locations
State
Region
City / District
மிருணாள் தாக்குர் - பூஜா ஹெக்டேவின் புதிய திரைப்படம்! ஓடிடி வெளியீட்டுத் தேதி!

மிருணாள் தாக்குர் - பூஜா ஹெக்டேவின் புதிய திரைப்படம்! ஓடிடி வெளியீட்டுத் தேதி!

ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை' திரைப்படம் கடந்த ஜூன் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களைப் பெற்றிருந்தது.

இந்தப் படத்தின் பிரதான பாத்திரங்களில் வருண் தவான், மிருணாள் தாகூர், பூஜா ஹெக்டே ஆகியோர் நடித்திருந்தனர். இந்தப் படத்தை வருண் தவானின் தந்தையும் இயக்குநருமான டேவிட் தவான் இயக்கியிருந்தார். ரொமான்டிக் காமெடி படமாக எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை, டிப்ஸ் ஃபிலிம்ஸ் சார்பில் ரமேஷ் தௌரானி தயாரித்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் ஜிம்மி ஷெர்கில், மனீஷ் பால், ஜானி லீவர், மெளனி ராய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஒரே நேரத்தில் இரண்டு உறவுகளுக்கு மனைவி, காதலி) இடையே நிகழும் குழப்பமான சூழலை எதிர்கொள்ளும் நாயகனின் கதையை நகைச்சுவைக் கலந்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 'ஹாய் ஜவானி தோ இஷ்க் ஹோனா ஹை' திரைப்படம் வரும் ஜூலை 31 ஆம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியாகிறது.


Dinamani 6 hours ago
Home Flash News