Select Location
All Locations
State
Region
City / District
மினிமம் பேலன்ஸுகாக 2026-ல் வாடிக்கையாளர்களிடம் ரூ.7,000 கோடி அபராதம் வசூலித்த வங்கிகள்!

மினிமம் பேலன்ஸுகாக 2026-ல் வாடிக்கையாளர்களிடம் ரூ.7,000 கோடி அபராதம் வசூலித்த வங்கிகள்!

புதுடெல்லி: குறைந்​த​பட்ச இருப்பு அளவை பராமரிக்​காத வாடிக்கையாளர்களிடம் இருந்து 2025-26-ம் நிதி​யாண்​டில் சுமார் ரூ.7,000 கோடியை வங்கிகள் அபராத​மாக வசூலித்​துள்​ளன. மாநிலங்​களவை​யில் உறுப்​பினர் ஒரு​வர் கேட்ட கேள்விக்கு மத்திய நிதித்​துறை இணை அமைச்​சர் பங்​கஜ் சவுத்ரி எழுத்​துப்​பூர்​வ​மாக அளித்த பதிலில் கூறி​யிருப்​ப​தாவது: இந்​திய ரிசர்வ் வங்கி தரவு​களின்​படி, 2025-26-ம் நிதி​யாண்​டில் தங்​கள் கணக்​கில் குறைந்​த​பட்ச இருப்பு அளவை பராமரிக்​காத வாடிக்கையாளர்களிடம் இருந்து வங்​கி​கள் ரூ.7,000 கோடிக்​கும் அதி​க​மான தொகையை அபராத​மாக வசூலித்​துள்​ளன. இதில் பொதுத்​துறை வங்​கி​கள் ரூ.2,137.92 கோடியை​யும் தனி​யார் வங்கிகள் ரூ.4,948.71 கோடியை​யும் வசூலித்​துள்​ளன.

தனி​யார் வங்​கி​களில் அதி​கபட்​ச​மாக ஹெச்​டிஎஃப்சி வங்கி ரூ.1,798.14 கோடி​யும், அதைத் தொடர்ந்து ஆக்​சிஸ் வங்கி ரூ.1,081.33 கோடி​யும் வசூலித்​துள்​ளன. இந்த 2 வங்​கி​களும் சேர்ந்து ரூ.2,879.47 கோடியை வசூலித்​துள்​ளன. இது, 19 தனி​யார் வங்​கி​கள் வசூலித்த மொத்த கட்​ட​ணத்​தில் 58% ஆகும். பிரதமரின் ஜன் தன் யோஜனா கணக்​கு​கள் உட்பட அடிப்​படை சேமிப்பு வங்கி வைப்பு கணக்​கு​களுக்கு இத்​தகைய அபராதக் கட்ட​ணங்​களில் இருந்து விலக்கு அளிக்​கப்​பட்​டுள்​ளது. பொதுத்​துறை வங்​கி​களின் நிதி​நிலை குறிப்​பிடத்​தக்க அளவில் மேம்பட்டுள்​ளது. வலு​வான இருப்​புநிலைக் குறிப்​பு​கள், சாதனை அளவி​லான லாபம் மற்​றும் மொத்த வாராக் கடன்​கள் குறைந்திருக்​கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Hindu Tamil 1 hour ago
Home Flash News