Select Location
All Locations
State
Region
City / District
ரஷ்யா - உக்ரைன் போரால் கருங்கடல் பகுதியில் சிக்கியுள்ள 13 இந்திய மாலுமிகளை மீட்க மத்திய அரசு தீவிரம்

ரஷ்யா - உக்ரைன் போரால் கருங்கடல் பகுதியில் சிக்கியுள்ள 13 இந்திய மாலுமிகளை மீட்க மத்திய அரசு தீவிரம்

புதுடெல்லி: கருங்கடல் பகு​தி​யில் சிக்​கி​யுள்ள 13 இந்திய மாலுமிகளை மீட்க இந்திய அதி​காரி​கள் தீவிர முயற்​சி​யில் இறங்கி​யுள்​ளனர். ரஷ்​யா- உக்​ரைன் இடையே​யான போர் 4 ஆண்​டு​களுக்கு மேலாக நீடித்து வரு​கிறது. இந்​நிலை​யில் கருங்​கடலில் உள்ள உக்​ரைன் துறை​முகத்​தில் இருந்து சமீபத்​தில் புறப்​பட்ட ஒரு சரக்கு கப்​பல் மீது நடத்​தப்​பட்ட தாக்​குதலில் 4 இந்​திய மாலுமிகள் உயி​ரிழந்​தனர். அதே​போல் கருங்​கடல் பகு​தி​யில் ரஷ்ய எல்​லைக்​குட்​பட்ட கடலில் பயணித்த கப்​பல் மீது நடத்​தப்​பட்ட தாக்​குதலில் ஒரு இந்​திய மாலுமி​ உயி​ரிழந்​தார். இந்நிலையில், உக்​ரைன் துறை​முகத்​தில் நடை​பெற்ற தாக்​குதல் காரண​மாக அங்கு நிறுத்​தப்​பட்​டுள்ள எம்.வி. அமீர் 1 கப்​பலில் 13 இந்​திய மாலுமிகள் உள்பட 15 பேர் சிக்கி தவித்து வரு​கின்​றனர்.

இந்தக் கப்பலுக்கு அருகே ஏவு​கணை, ட்ரோன் தாக்​குதல்​கள் நேற்று நடத்​தப்​பட்​டன. கப்​பல் நிறுத்​தப்​பட்டுள்ள பகு​தி​யில் புகை மண்​டல​மாக காட்சி அளிக்​கிறது. இதுதொடர்​பான வீடியோ வெளி​யாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வரு​கிறது. இதையடுத்து மத்​திய அரசுக்கு இந்​திய மாலுமிகள் சங்​கம் ஒரு கோரிக்​கையை விடுத்​துள்​ளது. இதுதொடர்​பாக மாலுமிகள் சங்க நிர்​வாகி​கள் கூறும்​போது, “உக்ரைன் துறை​முகத்​தில் கப்​பலுக்கு மிக அரு​கில் தொடர்ச்சியாக ட்ரோன் மற்​றும் ஏவு​கணைத் தாக்​குதல்​கள் நடத்​தப்​படு​கின்​றன. எந்த நேரத்​தி​லும் கப்​பல் நேரடி​யாகத் தாக்​கப்​படலாம் என்ற அச்​சத்​தில் பணி​யாளர்​கள் உள்​ளனர். எனவே மத்​திய அரசு, கப்​பல் உரிமை​யாளர்​கள், கப்​பல் பதிவு செய்​யப்​பட்ட நாட்​டின் நிர்​வாகம் மற்​றும் அதி​காரி​கள் உடனடி​யாகப் பணி​யாளர்​களின் பாது​காப்பை உறுதி செய்​து, அவர்​களை மீட்டு விரை​வாக நாடு திரும்ப ஏற்​பாடு செய்​யு​மாறு கேட்டுக் கொள்​கிறோம். மோதல் நடை​பெறும் பகு​தி​களில் இந்​திய மாலுமிகள் எளி​தில் தாக்​கப்​படக்​கூடிய இலக்​கு​களாக விடப்​படக்​கூ​டாது. இதில் உடனடி​யாக மத்​திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என்று தெரி​வித்​துள்​ளனர்.

இதனிடையே உக்​ரைன் தலைநகர் கீவில் உள்ள இந்​திய தூதரகம் தனது எக்ஸ் வலைதள பக்​கத்​தில் கூறிய​தாவது: இந்​திய மாலுமிகள் உள்ள எம்​.​வி. அமீர்-1 கப்​பல் தொடர்​பான விவ​காரம் எங்​கள் கவனத்​துக்​குக் கொண்டு வரப்​பட்​டுள்​ளது. இதில் உள்ள மாலுமிகளை மீட்​ப​தற்​காக நாங்​கள் அதிக முன்​னுரிமை அளித்து வரு​கிறோம். கப்​பலில் உள்ள அனைத்து இந்​தி​யர்​களின் பாது​காப்பை உறு​தி​செய்ய சம்​பந்​தப்​பட்ட அனை​வருட​னும் தொடர்ந்து தொடர்​பில் இருக்​கிறோம். இதுதொடர்​பாக சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்​தப்​பட்டு வரு​கிறது. இவ்​வாறு இந்​தி​யத்​ தூதரகம்​ தெரி​வித்​து உள்​ளது


Hindu Tamil 1 hour ago
Home Flash News