Select Location
All Locations
State
Region
City / District
5 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு கோயில் யானைகளுக்கு மீண்டும் புத்துணர்வு முகாம்

5 ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு கோயில் யானைகளுக்கு மீண்டும் புத்துணர்வு முகாம்

திருச்சி: தமிழகத்​தில் உள்ள கோயில் யானை​களுக்கு 5 ஆண்​டு​கள் இடைவெளிக்​குப் பிறகு மீண்​டும் புத்​துணர்வு முகாம் நடத்த இந்து சமய அறநிலை​யத் துறை திட்​ட​மிட்​டுள்​ளது. தமிழகத்​தில் இந்து சமய அறநிலை​யத் துறை​யின் கட்​டுப்​பாட்​டில் உள்ள கோயில்​கள் மற்​றும் மடங்​களில் வளர்க்​கப்​படும் யானை​கள், 2003 முதல் ஆண்​டு​தோறும் டிசம்​பர் முதல் ஜனவரி வரை புத்​துணர்வு முகாம்​களுக்கு அழைத்​துச் செல்​லப்​பட்டு வந்​தன. முது​மலை தெப்​பக்​காடு, தேக்​கம்​பட்டி ஆகிய இடங்​களில் 2021-ம் ஆண்டு வரை இந்த முகாம் நடத்​தப்​பட்டு வந்த நிலை​யில், பின்​னர் கரோனா தொற்று பரவல் காரண​மாக நிறுத்​தப்​பட்​டது. அதன்​பின் இது​வரை புத்​துணர்வு முகாம் நடத்​தப்​பட​வில்​லை. இந்​நிலை​யில், வரும் நவம்​பர் மாதம் முகாம் நடை​பெறும் என்ற தகவல் வெளி​யாகி இருக்​கிறது.

இதுகுறித்து திருச்சி மண்டல இந்து சமய அறநிலை​யத் துறை அதி​காரி​கள் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறிய​தாவது: பக்​தர்​களின் தொடர் கோரிக்​கையை ஏற்​று, கோயில்​கள் மற்​றும் திரு​மடங்​களில் பராமரிக்​கப்​படும் 28 யானை​களுக்கு வரும் நவம்​பர் மாதம் கோவை தேக்​கம்​பட்டி வனப்​பகு​தி​யில் புத்​துணர்வு முகாம் நடக்கிறது.முதல்​வர் விஜய்யும் முகாம் நடத்த ஆர்​வம் காட்​டு​கிறார். இதன்தொடர்ச்சியாக முகாம் நடை​பெறும் இடத்தை அமைச்​சர் எஸ்​.ரமேஷ் அண்​மை​யில் ஆய்வு செய்​துள்​ளார். முகாமில் யானை​களுக்கு தேவை​யான அனைத்து வகை​யான சிகிச்​சைகள், சத்​தான உணவு வகைகள்​ வழங்​கப்​படும்​. இவ்​வாறு அவர்​கள்​ கூறினர்​.


Hindu Tamil 1 hour ago
Home Flash News