Select Location
All Locations
State
Region
City / District
LIVE
பட்ஜெட்டுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயருமா? நிதித்துறை செயலர் விளக்கம்!

பட்ஜெட்டுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயருமா? நிதித்துறை செயலர் விளக்கம்!

அரசின் வருவாயைப் பெருக்க பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படுமா? என்பது குறித்து நிதித்துறை செயலாளர் விளக்கம் அளித்துள்ளது குறித்து...

முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு முதல்முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது. நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் இன்று 2026 - 27 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இதில், தவெக அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி அளவு குறித்து நிதித்துறை செயலாளர் சித்திக் விளக்கம் அளித்தார். அதில், தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் ரூ. 560 கோடி. வெற்றி வீடு ரூ. 1000 கோடி.

சிங்கப்பெண் அதிரடிப் படை திட்டம் ரூ. 313 கோடி. ஊரக சாலைகள் புனரமைப்பு பணிகளுக்காக ரூ. 504 கோடி. ஊரகப் பகுதியில் செயல்படும் தமிழ்நாடு வெற்றி இயக்கத்துக்கு ரூ. 2203 கோடி.

200 யூனிட் இலவச மின்சாரத்துக்காக ரூ. 1,545 கோடி. பயிர்க்கடன் தள்ளுபடிக்கு ரூ. 6082 கோடி. அண்ணன் சீர் திட்டத்துக்கு ரூ. 812 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

மேலும், வருவாய் மிகவும் குறைவாகவே உள்ளதால் அதனை பெருக்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டார். பெட்ரோல், டீசல் விலை ஏற்கெனவே உயர்ந்துள்ளதால், வரிகளை உயர்த்தும் திட்டம் இல்லை. எரிபொருளில் பெரும்பாலான வரி மத்திய அரசுக்கே செல்கிறது எனக் குறிப்பிட்டார்.


Dinamani 2 hours ago
Home Flash News