Select Location
All Locations
State
Region
City / District
வேளாண் பட்ஜெட் தாக்கல்.. சட்டப்பேரவைக்கு கருப்புச் சட்டை அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை

வேளாண் பட்ஜெட் தாக்கல்.. சட்டப்பேரவைக்கு கருப்புச் சட்டை அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் வருகை

தமிழக சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 6) காலை 9.30 மணிக்கு தமிழக அரசின் முதலாவது வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்கிறார். விவசாயத் துறைக்கான புதிய திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் மற்றும் பல்வேறு அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நாளில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்புச் சட்டை அணிந்து தமிழக சட்டப்பேரவைக்கு வந்துள்ளனர். தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இரட்டை அர்த்தத்தில் பேசினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், உதயநிதி கைதுக்கு கண்டனம் தெரிவிப்பதுடன், விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தும் வகையில் திமுக எம்.எல்.ஏ.க்கள் கருப்புச் சட்டை அணிந்து சட்டப்பேரவைக்கு வந்துள்ளதாக கூறப்படுகிறது. வேளாண் பட்ஜெட் தாக்கல் மற்றும் அதனை ஒட்டிய அரசியல் நிகழ்வுகள் காரணமாக, இன்று தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் பரபரப்பான சூழலில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Polimer News 1 hour ago
Home Flash News