Select Location
All Locations
State
Region
City / District
ரயில் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்த மாநில ஆதரவு தேவை: அஸ்வினி வைஷ்ணவ்

ரயில் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்த மாநில ஆதரவு தேவை: அஸ்வினி வைஷ்ணவ்

கடந்த மூன்று நிதியாண்டுகள் மற்றும் நடப்பு நிதியாண்டில் மொத்தம் 3,511 கிலோமீட்டர் தொலைவை உள்ளடக்கிய 29 ஆய்வுகளுக்கு (4 புதிய வழித்தடம், 25 இரட்டை வழித்தடம்) ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார் தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக ரயில்வே பட்ஜெட் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் உறுப்பினர் விஜய் வசந்த் எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்த அவர், தமிழ்நாட்டிற்கு 2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை ரூ.879 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் 2026-27-ம் ஆண்டில் ரூ.7,611 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 2014-ம் ஆண்டு முதல் 2026-ம் ஆண்டு வரையிலான நிதியாண்டு காலகட்டத்தில் 1,356 கிலோமீட்டர் தொலைவிற்கு புதிய வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

கடந்த மூன்று நிதியாண்டுகள் மற்றும் நடப்பு நிதியாண்டில் மொத்தம் 3,511 கிலோமீட்டர் தொலைவை உள்ளடக்கிய 29 ஆய்வுகளுக்கு (4 புதிய வழித்தடம், 25 இரட்டை வழித்தடம்) ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார். முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்கள் நிலம் கையகப்படுத்துதலில் உள்ள தாமதம் காரணமாக தடைப்பட்டுள்ளதாக அவர் கூறினார். தமிழ்நாட்டின் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்காகத் தேவைப்படும் 4,612 ஹெக்டேர் நிலங்களில் 1,178 ஹெக்டேர் (26%) நிலங்கள் மட்டும் கையகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார். நிலம் கையகப்படுத்துதலை விரைவுபடுத்த தமிழக அரசின் ஆதரவு தேவை என்று அவர் குறிப்பிட்டார். நிலம் கையகப்படுத்துதலில் ஏற்படும் தாமதம் காரணமாக திண்டிவனம் - திருவண்ணாமலை புதிய வழித்தடம், அத்திப்பட்டு-புத்தூர் புதிய வழித்தடம், மொரப்பூர்-தர்மபுரி புதிய வழித்தடம், மன்னார்குடி-பட்டுக்கோட்டை புதிய வழித்தடம், தஞ்சாவூர்-பட்டுக்கோட்டை புதிய வழித்தடம் ஆகிய திட்டங்களை செயல்படுத்துவது தாமதமாகியுள்ளதாக அவர் தெரிவித்தார்.


News 18 Tamil Nadu 1 hour ago
Home Flash News