Select Location
All Locations
State
Region
City / District
மின்னலை விழுங்கி மின்சாரத்தை கொப்பளிக்கும் அண்ணன் எடப்பாடி..

``மின்னலை விழுங்கி மின்சாரத்தை கொப்பளிக்கும் அண்ணன் எடப்பாடி..!" - புகழ்ந்து தள்ளிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி

அதிமுக சார்பில் பேசிய அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ``கல்லறைக்குள்ளே இருந்தாலும் உலகத்தாரின் கவனத்தை இன்றைக்கும் ஈர்க்கும் ஏழைகளின் பிதாமகன் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்,

அதிமுகவின் பிதாமகள், தமிழ்கூறும் நல்லுலகின் ஒரே தலைவி புரட்சித் தலைவி,

இவர்களின் வழியில் இயக்கத்தின் பொதுச்செயலாளராக சட்டமன்ற சன்னிதானத்தில் புரட்சித் தலைவியின் ஒரே அரசியல் வாரிசான எங்கள் அண்ணன் எடப்பாடியார் அவர்களை வணங்குகிறேன்.

கலசப்பாக்கம் தொகுதியில் அதிமுக சார்பில் தேர்தல் களம் கண்ட ஆற்றல் மிகுந்த படைவீரர்களே, சிகரத்தை செதுக்கும் சிங்கங்களே, காற்றோடு கைகுலுக்கும் கனல் நெருப்புகளே, மின்னலை விழுங்கி மின்சாரத்தை கொப்பளிக்கும் அண்ணன் எடப்பாடியாரின் விழுதுகளே உங்களுக்கும் என்னை வெல்ல வைத்த கலசப்பாக்கம் மக்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி.

வானவில்லிற்கு வளைகாப்பு நடத்தும் வசந்த காலத்தில் நிதிநிலை அறிக்கை குறித்து பேச வாய்ப்பு கொடுத்த எடப்பாடியாருக்கு நெஞ்சார்ந்த நன்றி." என்று ஏகத்துக்கும் புகழ்ந்து தள்ளி இருக்கிறார்.!


Nakkeeran 52 minutes ago
Home Flash News